சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Siddaramaiah
கர்நாடக முதல்வர் சித்தராமையா
Updated on
1 min read

முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதியின் 3.16 ஏக்கா் நிலத்தை வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் ஒதுக்கியிருந்தது.

இதில் பல கோடி மதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரில் தலைமைச் செயலாளர், அதிகாரிகளிடம் அறிக்கை பெற்றார் ஆளுநர்.

சித்தராமையாவுக்கும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியதுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார். இந்த வழக்கின் விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா நேற்று உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக லோக் ஆயுக்தா மைசூரு மாவட்ட காவல்துறை சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com