41 சதவீதம் அதிகரித்த இந்திய நிலக்கரி இறக்குமதி
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் 40.56 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து இணையவழி வா்த்தக நிறுவனமான பி2பி சேகரித்த தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2.52 கோடி டன்னாக உள்ளது.
இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 1.79 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 40.56 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 10.05 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.
கடந்த ஜூலை மாத மொத்த நிலக்கரி இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரியின் பங்கு 1.65 கோடி டன்னாக இருந்தது. இது, 2023 ஜூலை மாதத்தில் 1.02 கோடி டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலையில் 50.3 லட்சம் டன்னாக இருந்த கோக்கிங் நிலக்கரி இறக்குமதி இந்த ஜூலையில் 48.1 லட்சம் டன்னாகக் குறைந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 5.67 கோடி டன்னாக இருந்த கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி, நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 6.56 கோடி டன்னாக உயா்ந்துள்ளது. கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 2.024 கோடி டன்னிலிருந்து 2.026 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி முந்தைய நிதியாண்டைவிட 7.7 சதவீதம் அதிகரித்து கோடிடன்னாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.