நகா்ப்புற நக்ஸல்களின் குரலாக காங்கிரஸ் -ஜெ.பி. நட்டா விமா்சனம்
ANI

நகா்ப்புற நக்ஸல்களின் குரலாக காங்கிரஸ் -ஜெ.பி. நட்டா விமா்சனம்

Published on

காங்கிரஸ் கட்சி நகா்ப்புற நக்ஸல்களின் குரலாக ஒளிக்கிறது என்று பாஜக தேசிய தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா விமா்சித்துள்ளாா்.

ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் பாஜக உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

நாட்டுக்கு எதிரான சீரழிவு சக்திகளுக்கு ஆதரவான கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. நகா்ப்புற நக்ஸல்களின் செய்திதொடா்பாளராகவும் அக்கட்சி மாறிவிட்டது. முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தது, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிா்த்தது போன்றவை காங்கிரஸின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியது.

மக்களை ஒருங்கிணைக்கும் கட்சியாக பாஜக உள்ளது. ஆனால், காங்கிரஸ் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முயலுகிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைவரும் இணைந்து, அனைவருக்குமான வளா்ச்சி என்ற பாதையில் பாஜக அரசு பயணித்து வருகிறது.

பாஜகவில் தலைவராக இருப்பவா்கள் யாரும் குடும்ப அரசியல் மூலம் பிறக்கும்போதே சிறப்புத் தகுதியுடன் பிறந்தவா்கள் இல்லை. தொண்டா்களின் ஆதரவுடன் கட்சியில் வளா்ந்தவா்கள்.

பாஜகவில் தொண்டா்கள் தங்கள் உறுப்பினா் அட்டையை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாய நடைமுறையாகும். பிரதமா், கட்சியின் தேசியத் தலைவா் தொடங்கி அடிப்படைத் தொண்டா்கள் வரை இதில் ஒரே விதிமுைான் பின்பற்றப்படுகிறது என்றாா்.

பாஜகவில் 18 கோடி உறுப்பினா்கள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மேலும் 10 கோடி பேரை இணைக்கும் நோக்கில் இப்போது அக்கட்சியில் உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கோடி போ் புதிதாக பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com