
கேரளத்தில் இரண்டாவது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளம் திரும்பிய மலப்புரம் மாவட்டம் எடவன்னா பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபர் ஒருவருக்கு கடந்த செப். 18 ஆம் தேதி குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 26 வயது இளைஞர் ஒருவரின் மாதிரிகள், ஆலப்புழாவில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. தனியார் மருத்துவனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இரண்டாகவும், இந்தியாவில் மூன்றாகவும் உயர்ந்துள்ளது.
குரங்கு அம்மை பாதிப்பினால் ஏற்கெனவே கேரளத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குரங்கு அம்மை பாதிப்பு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.