அமாவாசைக்குப் பின் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு: ஹர்ஷவர்தன் பாட்டீல்

ஜனநாயகத்தில் மக்களின் கருத்தையே உயர்ந்ததாகக் கருதுகிறேன்.
பாஜக தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல்
பாஜக தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அமாவாசைக்குப்பின் முடிவெடுக்கப்படும் என பாஜக தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் இந்தாண்டு நவம்பர் 26-ம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், மாநில பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மாநில பேரவைத் தேர்தலில் புணேவின் பாராமதி தாலுகாவில் உள்ள இந்தாபூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும், அதாவது பித்ரு பட்சம் நிறைவடைந்த பிறகு அறிவிக்கப்படும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட பாட்டீல் பெரும்பாலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பக்கம் மாறக்கூடும் என்றும் கடந்த சில நாள்காளாக ஊகங்களும் பரவி வருகின்றன.

கடந்த 1995, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்களில் பாட்டீல் இந்தாபூர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார். ஆனால் காங்கிரஸ் அந்த தொகுதியை தக்கவைத்தது. 2019ல் நடைபெற்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தத்தாத்ரே பார்னே 3,110 வாக்குகள் வித்தியாசத்தில் பாட்டீலை தோற்கடித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், கடந்த சில நாள்களாக எனது தொகுதியில் ஜனதா தர்பார் (பொது மக்கள் தொடர்பு) நடத்தி வருவதாகவும், வரும் பேரவைத் தேர்தலில் இந்தாபூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என பலர் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஜனநாயகத்தில் மக்களின் கருத்தையே உயர்ந்ததாகக் கருதுவதால், நான் ஒரு முடிவு எடுக்க வேண்டும். "பித்ரு பட்சம் முடிந்ததும் முடிவு எடுப்பேன்" என்று அவர் கூறினார்.

இந்து நாள்காட்டியில் பித்ரு பட்சம் என்பது மகாளய அமாவாசையின் முதல் பதினைந்து நாளாகும். இந்த காலங்களில் புதிதாக எந்த காரியங்களைத் தொடங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com