புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம்!

மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டுள்ளதாக உள்கட்டமைப்பு நிறுவனமான மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: இந்தியாவில் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டுள்ளதாக உள்கட்டமைப்பு நிறுவனமான மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்று மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
தாமோதர் வேலி கார்ப். நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா வெற்றி!

10 கி.மீ பிங்க் பவர் ரன் 2024ல் சுமார் 5,000 பேர் பங்கேற்றனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்.ஆர். அறக்கட்டளையின் தலைவர் சுதா ரெட்டி கூறுகையில், புற்றுநோயிலிருந்து தப்பியவர்களின் எழுச்சியூட்டும் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும், ஆதரவான சமூகத்தை உருவாக்குவதற்கும் இந்த ஓட்டம் ஒரு தளமாக அமையும் என்றார்.

ஒன்றாக, நாம் மனத் தடைகளை உடைக்கலாம், சமூக கட்டுக்கதைகளை அகற்றி, தனிநபர்கள் ஆரோக்கியத்தைப் பொறுப்பேற்கும் வகையில் நாம் அவர்களுக்கு அதிகாரம் வழங்கலாம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com