மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதுன் சக்கரவர்த்தி
மிதுன் சக்கரவர்த்தி
Published on
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது அறிமுக படத்திலேயே தேசிய விருது வாங்கிய மிதுன் சக்கரவர்த்தி, சுவாமி விவேகானந்தா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்.

பாலிவுட்டில் டிஸ்கோ டான்சர் படம் மூலம் புகழ் பெற்ற இவர், வங்காளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.

வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின் அண்ணா! நடிகர் சிம்பு நெகிழ்ச்சி

தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான 'யாகாவாராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த 74 வயதான மிதுன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்திய திரையுலகினருக்கு மத்தியஅரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இந்த விருதினை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com