உத்தரகண்ட் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
உத்தரகண்ட் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்ற பொது சிவில் சட்டம் வழியமைக்கும் என்று கூறப்படுகிறது.

நாட்டில் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக உத்தரகண்ட் சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை கூட்டப்பட்டது.

இன்று காலை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யும்போது பேரவையில் இருந்த பாஜக எம்எல்ஏ “வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிற்பகல் 2 மணிவரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று பிற்பகல்முதல் மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, நாளை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, உத்தரகண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது.

அந்தக் குழு 740 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமியிடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தது. தொடர்ந்து, உத்தரகண்ட் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com