வடமாநிலங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கடுமையான குளிர் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக அதிக பனிப்பொழிவு, குளிர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மேலும் இரண்டு நாள்களுக்கு அதிகப்படியான குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த 3 நாள்களுக்கு வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சமவெளிகளின் சில பகுதிகளில் அடர்த்தியானது முதல் மிக அடர்த்தியான பனிமூட்டம் தொடரும் என கணித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று(01.01.24) வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 3,4 நாள்களுக்கு தமிழகம், தென் கேரளம், லட்சத்தீவுகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அதேசமயம், ஜன 5 வரை பஞ்சாபின் சில பகுதிகளில் இரவு மற்றும் காலை நேரங்களில் அடர்த்தியான மற்றும் மிகவும் அடர்த்தியான பனியும், ஜன.3 வரை ஹரியாணா, சன்டீகரில் சில பகுதிகளில் பனி நிலவும். மேலும், ஹிமாசலில் சனிக்கிழமை வரையிலும், உ.பி.யில் வியாழன் வரையிலும், ம.பி.யில் செவ்வாய் வரையிலும், பிகார், கங்கை மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய இடங்களிலும் அதிகாலை அடர்ந்த மூடுபனியும் நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



