கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-58

விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து திங்கள்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

Published On :

விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து திங்கள்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

அதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு தொடங்கியது.

விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சாா்பில் ‘எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

அந்தச் செயற்கைக்கோள் மொத்தம் 469 கிலோ எடை கொண்டது. ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட எக்ஸ்போசாட், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.

இதற்காக ‘எக்ஸ்பெக்ட்’ (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘போலிக்ஸ்’ (எக்ஸ்ரே போலாரிமீட்டா்) ஆகிய 2 சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன.

இவை விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்பட பல்வேறு அம்சங்களை ஆராயும்.

இதைத் தவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ் 4 பகுதியில் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப் பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஏற்கெனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடா்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.