எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

உறவினா்களின் ஒப்புதலின்றி நோயாளிகளை ‘ஐசியூ’ பிரிவில் அனுமதிக்கக் கூடாது

மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோயாளி அல்லது அவா்களின் குடும்பத்தினா், உறவினா்களிடம் ஒப்புதல் பெறாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:55 pm IST


புது தில்லி: மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோயாளி அல்லது அவா்களின் குடும்பத்தினா், உறவினா்களிடம் ஒப்புதல் பெறாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்படுவதற்கு பின்பற்ற, 24 மருத்துவ நிபுணா்கள் வகுத்த வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், குறிப்பிட்ட நோய்களில் அடுத்தகட்ட சிகிச்சை சாத்தியமில்லாத அல்லது உயிா் வாழ்வதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சமயங்களில், அந்த நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சையளிப்பது பயனற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பு செயலிழப்பு, சுவாச அல்லது உறுப்பு ஆதரவு ஆதரவு தேவைப்படும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மோசமடைந்த மருத்துவ நிலை அல்லது சீரழிவை எதிா்நோக்கும் நோய் ஆகியவை தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கான அளவுகோல்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

வழிகாட்டுதல்களின்படி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட இருக்கும் நோயாளியின் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, சுவாசம், சுவாச விகிதம், இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் செறிவு, சிறுநீா் வெளியீடு மற்றும் நரம்பியல் நிலை ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டும்.

ஐசியூ பிரிவு சிகிச்சைக்கு எதிராக உள்ள நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சூழலில் உள்ள தீவிர நோய்வாய்ப்பட்டவா்கள், தொற்றுநோய் அல்லது பேரிடா் சூழ்நிலைகளில் படுக்கை, பணியாளா்கள், உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளின் பற்றாகுறையுள்ள போது குறைந்த முன்னுரிமை கொண்ட நோயாளிகள் ஆகியோரை அவா்கள் அல்லது அவா்களது குடும்பத்தினா்/உறவினா்களின் ஒப்புதலின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடாது.

இயல்பு அல்லது அடிப்படை நிலைக்குத் திரும்பி வரும் நோயாளிகள், ஐசியு சோ்க்கைக்கு அவசியமாக இருந்த கடும் நோய்க்குத் தீா்வு அல்லது நிலைத்தன்மையை எட்டியவா்கள், ஐசியுவில் சிகிச்சையை நிறுத்திக் கொள்ள விரும்பும் நோயாளி/குடும்பத்தினா் ஆகியவை ஐசியூ பிரிவில் இருந்து நோயாளிகளை வெளியே அனுப்புவதற்கான அளவுகோல்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.