பிரதமர் மோடி குறித்து அவதூறு: மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் நீக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.
மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீஃப், அப்துல்லா மஜூம் மஜித்
மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீஃப், அப்துல்லா மஜூம் மஜித்


பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு சென்றிருந்தார். இது சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கருதப்பட்டது. 

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த மோடி, மாலத்தீவு  வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரியமான மரபு மற்றும் மக்களுக்கான சான்று. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்பாக தனது பயணம் அமைந்தது. 

பிரமிக்க வைக்கும் லட்சத்தீவு அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் பிரமிப்பில் உள்ளேன். அகத்தி, பங்காரம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களது உபசரிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார். 

பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சா்கள் உள்ளிட்ட அந்த நாட்டின் தலைவா்கள் சிலா் வலைதள பக்கத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின.

இது குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மசூம் மஜீத் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது. மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத் தளத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக தெரிவித்திருந்தார். இது பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலர் மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவை முன்வைத்தனர். பலர் தங்களது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர்.

மாலத்தீவின் புதிய பிரதமராக முகமது மூயிஸ் கடந்த நவம்பரில் பதவியேற்ற பிறகு, இந்தியா - மாலத்தீவு உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முகமது மூயிஸ் தனது பதிவியேற்றபோது மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்ற உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.  

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீஃப், அப்துல்லா மஜூம் மஜித் ஆகிய மூன்றும் பேரும் மோடி லட்சத்தீவில் எடுத்த புகைப்படங்களை பகிரிந்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர்.

உயிர் காக்கும் உடை அணிந்த மோடி இஸ்ரேஸின் கைப்பாவை என மரியம் ஷியுனா கூறியிருந்தார்.

ஷியுனாவைத் தவிர, எம்.பி. ஜாஹித் ரமீஸ் உள்ளிட்ட மாலத்தீவு அதிகாரிகள், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை கேலி செய்துள்ளனர். புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்ற பின்னர், பலர் அதை மாலத்தீவுடன் ஒப்பிட்டனர்.

இந்த நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், பிரதமர் மோடிக்கு எதிராக மரியம் ஷியூனாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

'தனிப்பட்ட கருத்துகள்'

மாலத்தீவு அரசு, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மரியம் ஷியுனா கூறிய இழிவான கருத்துகள் நிராகரிப்படுகிறது, அவை மாலத்தீவு அரசின் கருத்துகள் அல்ல என்று மாலத்தீவு அரசு கூறியது.

வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தரக்குறைவான கருத்துகளை பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த கருத்துகள் தனிப்பட்டவை மற்றும் அவை மாலத்தீவு அரசின் கருத்துகள் அல்ல.

கருத்துச் சுதந்திரம் ஜனநாயக மற்றும் பொறுப்பான முறையிலும், வெறுப்பு, எதிர்மறையைப் பரப்பாத மற்றும் மாலத்தீவுக்கும் அதன் சர்வதேச நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு இடையூறு விளைவிக்காத வழிகளிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. 

மேலும், மோடிக்கு எதிராக இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துகளை தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாலத்தீவு அரசு அதிகாரிகள் "தயங்க மாட்டார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து சமூக வலைதளத்தில் எதிரான பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீஃப், அப்துல்லா மஜூம் மஜித் ஆகிய 3 அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com