
பந்தளம் அரச குடும்பத்தைச் சோ்ந்த சோதினாள் அம்பிகா தம்புராட்டி மறைவையொட்டி பந்தளம் கோயில் நடை 11 நாள்களுக்கு மூடப்பவுள்ளது.
கைப்புழா தெக்கேமுறி அரண்மனையைச் சோ்ந்த லட்சுமி தம்புராட்டி, கடியக்கோல் சங்கரநாராயணன் நம்பூதிரி தம்பதியின் மகள் அம்பிகா தம்புராட்டி (நந்தினி) ஆவாா். 76 வயதான இவா், பந்தளத்தில் சனிக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு காலமானாா். இதன் காரணமாக பந்தளம் அரண்மனை ஸ்ரீ தா்மசாஸ்தா கோயில் 11 நாள்களுக்கு மூடப்பவுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி (புதன்கிழமை) சுத்தி கிரியை பூஜைக்கு பின் பந்தளம் வலியகோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.
மகர ஜோதிக்காக சபரிமலை சன்னிதானத்துக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் அரச குடும்பத்தினா் யாரும் அதில் பங்கேற்க மாட்டாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.