மாயாவதி உண்மையிலேயே பாஜகவை எதிர்ப்பதாக இருந்தால் பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறினார்.
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பிரமோத் திவாரி, “மாயாவதி பாஜகவை உண்மையாகவே எதிர்ப்பதாக கருதினால், பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு மோடியை எதிர்க்க துணிவில்லை என்றால் பரவாயில்லை.” என்று தெரிவித்தார்.
மேலும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரமோத் திவாரி, “நாங்கள் சமாஜ்வாதி கட்சியுடன் இருமுறை சந்தித்து பேசியுள்ளோம். தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.” என்று கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


