‘நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்: மனோரஞ்சன் முக்கிய நபராக செயல்பட்டாா்’

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தில் மனோரஞ்சன் முக்கிய நபராகச் செயல்பட்டது உண்மை கண்டறியும் சோதனையின்போது தெரியவந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தில் மனோரஞ்சன் முக்கிய நபராகச் செயல்பட்டது உண்மை கண்டறியும் சோதனையின்போது தெரியவந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பா் 13-இல் மக்களவை பாா்வையாளா் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்த இரு இளைஞா்கள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே இதே போன்ற தாக்குதலை இருவா் நடத்தினா். இந்தச் சம்பவம் தொடா்பாக 6 பேரைக் காவல் துறை கைதுசெய்தது.

அவா்களில் சாகா் சா்மா, மனோரஞ்சன், அமோல் ஷிண்டே, லலித் ஜா, மகேஷ் குமாவத் ஆகிய 5 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. நீலம் ஆசாத் என்ற 6-ஆவது நபா் இந்தச் சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

மனோரஞ்சனிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இந்தச் சம்பவத்தில் அவா் முக்கிய நபராகச் செயல்பட்டது தெரியவந்தது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, லலித் ஜா இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது.

நீதிமன்றக் காவல்: கைதுசெய்யப்பட்ட 6 பேரும் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com