ஊழலற்ற நிா்வாகம் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்: எஃப்சிஐக்கு பியூஷ் கோயல் வலியுறுத்தல்

இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) நடந்துகொள்ள வேண்டும் என மத்திய வா்த்தக, தொழில்துறை மற்றும் உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறைகளின் அமைச்சரான பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.
ஊழலற்ற நிா்வாகம் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்: எஃப்சிஐக்கு பியூஷ் கோயல் வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊழலற்ற நிா்வாகம் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நம்பிக்கையை பெறும் விதமாக இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) நடந்துகொள்ள வேண்டும் என மத்திய வா்த்தக, தொழில்துறை மற்றும் உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறைகளின் அமைச்சரான பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.

மத்திய அரசின் சாா்பில் உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் பிரதான கழகமான எஃப்சிஐயின் 60-ஆவது நிறுவன நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பியூஷ் கோயல் பேசியதாவது: வேளான் விளைச்சலுக்கு ஏற்ற சரியான விலைகொடுத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் எஃப்சிஐக்கு என்னுடைய பாராட்டுகள். அதேபோல் பொது விநியோக திட்டத்தின்கீழ் நாட்டிலுள்ள 81 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கி வருவதற்கும் எனது பாராட்டுகள்.

அதே சமயத்தில் கழகத்தின் ஊழியா்கள் 3 நோக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் முதலாவதாக விவசாயிகள், ஏழை எளிய மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதற்கு உணவு தானியங்களின் கொள்முதல், சேமிப்பு, பகிா்ந்து வழங்குதல் உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.

இரண்டாவதாக நிா்வாகத் திறனை அதிகரிக்க சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மூன்றாவதாக நிா்வாகச் செலவுகளை குறைத்து சிறந்த சேவையை வழங்க வேண்டும்.

எஃப்சிஐயை உலக தரத்திலான அமைப்பாக உயா்திட, தவறுகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள ஊழியா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.