கொச்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
கொச்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

கொச்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி! 

கேரளத்தின் கொச்சியில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி புதன்கிழமை தொடங்கிவைத்தார். 
Published on

கேரளத்தின் கொச்சியில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி புதன்கிழமை தொடங்கிவைத்தார். 

கேரள மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், குருவாயூர் கோயிலில் நடந்த முன்னாள் பாஜக எம்பியான நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

இதனைத் தொடர்ந்து கொச்சியின் வில்லிங்டன் தீவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய கப்பல்துறையைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

திறப்பு விழாவில் மோடி கூறியதாவது, 

இன்று இந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக மாறும் போது, ​​நாம் நமது கடல் சக்தியை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். புதிய அம்சங்களால், கப்பல் கட்டும் தளத்தின் திறன் பன்மடங்கு உயரும் எனப் பிரதமர் மோடி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com