பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அயோத்தி ராமர் கோயில் சிறப்பு அஞ்சல் தலைகள், உறைகளை வெளியிட்டார் பிரதமர்!

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு அஞ்சல் தலைகள், ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அஞ்சல் உறைகளின் புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

News image
Updated On :18 ஜனவரி 2024, 8:31 am

DIN

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு அஞ்சல் தலைகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளால் வெளியிடப்பட்ட ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அஞ்சல் உறைகளின் புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை ஜன.22-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையைத் திறந்துவைக்க உள்ளார். இந்த நிகழ்விற்கு பல்வேறு முக்கிய தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 

Story image

இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டார். ராமர் கோயில், சூரியன், சராயு நதி மற்றும் கோயில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தினார். மேலும் உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய அஞ்சல் உறைகள் அடங்கிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.