கோயில்களில் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பது கண்டனத்துக்குரியது: நிர்மலா சீதாராமன் 

ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடைவிதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோயில்களில் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பது கண்டனத்துக்குரியது: நிர்மலா சீதாராமன் 
Published on
Updated on
1 min read

ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடைவிதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த கோலாகல நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடைவிதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு  தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.  அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். 

பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. இந்து விரோத, வெறுப்பு நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோயில்களில் நாளை ராமர் பெயரில் பூஜை நடத்த தடை என்ற தகவலுக்கு இந்து சமய அறிநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.  

அன்னதானம் உள்ளிட்ட வழக்கமான நிகழ்வுகளுக்கு கோயில்களில் நாளை கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com