
அயோத்தி ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ஸ்ரீ ராமரின் சிலை இன்று வெகு விமரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த தருணத்தை மக்கள் நேரடியாகவும், நேரலையிலும் பரவசம் பொங்க ராமர் சிலை பிரதிஷ்டையை மனமுருகிக் கண்டு மகிழ்ந்தனர்.
அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தினார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டபோது ராமர் கோயிலின் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.