மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவுகளால் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
சிர்மாவூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்குப் பின்னர் மாணவர்களுக்கு பூரி-சப்ஜி மற்றும் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளர்.
இதையடுத்து மாணவர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அனைத்து மாணவர்களின் உடல்நிலையும் சீராகிய நிலையில், ஒரு மாணவியில் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனால் அவர் அரசு சஞ்சய் காந்தி நினைவக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலான சிகிச்சை வழங்குவதற்காக குஷா பாவு தாக்ரே மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஷியாம் ஷா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








