
புது தில்லி : அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்காக, கடந்த ஆண்டில், 14 லட்சம்(1.4 மில்லியன்) அமெரிக்க விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் 75 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம், சராசரியாக 1000 நாட்களாக இருந்த நிலையில், காத்திருப்பு நேரம் தற்போது 250 நாட்களாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விசா பெறுவதற்கு இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், கடந்த 2022-ஆம் ஆண்டை காட்டிலும், கடந்த ஆண்டு 60 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், அமெரிக்கா செல்வதற்கான விசா பெற விண்ணப்பிப்பவர்களில் பத்தில் ஒருவர் இந்தியராக உள்ளார் என அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி1/பி2 பார்வையாளர் விசாக்கள் பெறுவதற்காக, பெறப்பட்ட விண்ணப்பங்கள், 7 லட்சத்தை தாண்டியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.எந்த நாட்டுக்கும் இல்லாத அளவாக, இந்தியாவில் உள்ள மாணவர்களுக்காக கடந்த ஆண்டு 1,40,000 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.