
குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்ட பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அக்ஷய்ராஜ் மக்வானா கூறுகையில், "திசா பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 9.45 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தின் மேற்கூரை தீப்பிடித்து இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாவர். அவர்களில் பெரும்பாலானோர் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிரிழந்தனர்' என்றார்.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மாநில முதல்வர் பூபேந்திர படேல் "எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். மாநில அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்' என்றார்.
மத்திய பிரதேச தொழிலாளர்களின் மரணத்துக்கு அந்த மாநில முதல்வர் மோகன் யாதவும் இரங்கல் தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.