வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்: மமதா வேண்டுகோள்!

பாஜகவை கடுமையாக விமர்சித்த மமதா பானர்ஜி..
வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்: மமதா வேண்டுகோள்!
Published on
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் வரவிருக்கும் ராம நவமி விழாவை அமைதியாகக் கொண்டாடுமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

ஏப்ரல் 6ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படுகிறது. நாட்டைப் பிளவுபடுத்தும் ஒரே திட்டத்தைக் கொண்ட கட்சி பாஜக தான் என்று வெளிப்படையாக அவர் விமர்சித்துள்ளார். ராம நவமியின்போது அனைத்து சமூகத்தினரும் அமைதியைக் காக்க வேண்டும், வதந்திகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பானர்ஜி மாநில செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மக்கள் எந்தவொரு கலவரத்திலும் ஈடுபட வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், இது பாஜக அரசின் திட்டம். மேற்கு வங்கத்தில், ராமகிருஷ்ணா, விவேகானந்தரின் போதனைகளைப் பின்பற்றுகிறோமே தவிர பாஜகவின் போதனைகளை அல்ல. மதம் ஒரு தனிநபருக்குச் சொந்தமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் பண்டிகைகள் அனைவருக்கும் பொதுவானவை.

சீக்கியர்கள் பேரணிகளையும் நடத்தலாம், ஆனால் காவல்துறையின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும், பிரச்னையை உருவாக்கக்கூடாது என்று அவர் கூறினார். ஏப்ரல் 9ல் ஜெயின் சமூகத்தின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாகப் பரவிய வதந்தியைக் குறிப்பிட்ட அவர், டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்தி இதுபோன்ற போலி விஷயங்களை பாஜக பரப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பானர்ஜி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com