நரேந்திர மோடி
நரேந்திர மோடி ANI

தமிழக பயணத்தை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன்: பிரதமா் மோடி

Published on

மங்களகரமான ராம நவமி நன்னாளில் (ஞாயிற்றுக்கிழமை) தமிழக பயணம் மேற்கொள்வதை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன் என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தின் ராமேசுவரத்துக்கு வருகை தரும் பிரதமா் மோடி, நாட்டின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை திறந்துவைக்க உள்ளாா். பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் வழிபடும் அவா், ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்ட பிரதமா், ‘மங்களகரமான ராம நவமி நன்னாளில் தமிழக சகோதர-சகோதரிகளுடன் இருப்பதை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன். புதிய பாம்பன் பாலத்தை திறந்துவைப்பதுடன், ஸ்ரீராமநாத சுவாமி கோயிலில் வழிபட உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ராமேசுவரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் புதிய பாம்பன் பாலம், உலக அரங்கில் இந்திய பொறியியல் திறனுக்கு சான்றாக விளங்குகிறது.

X
Dinamani
www.dinamani.com