
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் இன்று (ஏப். 8) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, கடும் வெய்யிலால் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சோர்வடைந்திருந்த ப. சிதம்பரத்தை, உடன் இருந்த நிர்வாகிகள் அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் தேசிய மாநாடு நடைபெறுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர்கள் என நாடு முழுவதிலுமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், தமிழகத்திலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பங்கேற்றிருந்தார்.