மகாராஷ்டிர தேர்தலில் பாஜக மோசடி செய்தது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி: கார்கே

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் காங்கிரஸ் குற்றச்சாட்டு..
மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ஏஐசிசி கூட்டத்தில் உரையாற்றிய கார்கே,

மோடி அரசு தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் அரசு சொத்துக்களை விற்று ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவருகின்றது.

வாக்குச் சீட்டிலிருந்து மின்னணு இயந்திரத்துக்கு மாறி வரும் நிலையில், நாம் மின்னணு இயந்திரத்தையே மாற்றுகிறார்கள். என்ன வேடிக்கை பாருங்கள்.. இவை அனைத்தும் மோசடியே. ஆளும் கட்சிக்கு நன்மையளிக்கவும், எதிர்க்கட்சியை பாதகப்படுத்தும் நுட்பங்களையும் பாஜக வகுத்து வருகின்றது.

மகாராஷ்டிரத்தில் நடந்தது என்ன? தேர்தல் மோசடி குறித்த பிரச்னையை காங்கிரஸ் கேள்வி வன்மையாக கண்டித்தது. பாஜக எந்த மாதிரியான வாக்காளர் பட்டியலைத் தயாரித்தார்கள்? ஹரியாணா தேர்தலிலும் இதேதான் நடந்தது என்று காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார்.

பாஜக 90 சதவீத இடங்களை வென்றதைச் சுட்டிக்காட்டிய கார்கே, மகாராஷ்டிர தேர்தலில் நடந்தது போன்ற மோசடி, இதற்கு முன்பு நடந்ததில்லை என்றும் இது ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கில் செய்யப்பட்டதாகவும் கார்கே குற்றம் சாட்டினார்.

நிச்சயம் தேர்தல் முறைகேடு பற்றி நாங்கள் ஆய்வோம். திருடன் எப்போதும் பிடிபடுவான். அதற்கான முயற்சிகளில் வழக்குரைஞர்களும், தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 11 ஆண்டுகளாக ஆளும் கட்சி அரசியலமைப்பைத் தாக்கி வருகிறது. அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் தாக்கப்படுகின்றன, அவற்றைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் பாஜகவின் விருப்பதிற்கேற்பவே நடைபெறுகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரைப் பேசக்கூட அனுமதிப்பதில்லை. இது ஜனநாயகத்தில் வெட்கக்கேடானது. எதிர்க்கட்சித் தலைவரையே பேச அனுமதிக்கவில்லை என்றால், மக்கள் குரல் எழுப்புவதை அவர்கள் எப்படி அனுமதிப்பார்கள்.

மணிப்பூர் விவகாரத்திலும் அரசு எதையோ மறைக்க விரும்புவதாகத் தெரிகிறது என்று கார்கே குற்றம் சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com