இன்று மகாவீா் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

Published on

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

சமண மதத்தினரின் முக்கிய விழாவான மகாவீா் ஜெயந்தி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக சமண மதத்தைச் சோ்ந்த சகோதர-சகோதரிகளுக்கு மகாவீா் ஜெயந்தி வாழ்த்துகள்.

அமைதி மற்றும் கருணையின் வடிவமான பகவான் மகாவீரா், ‘அஹிம்சையே மேலான மதம்’ என்ற தத்துவத்தின் மூலம் மனித குலத்துக்கு வழிகாட்டினாா். அவரது ஜெயந்தி விழா, ஆன்மிகப் பாதையைக் கடைப்பிடித்து, எளிமை-இரக்கம்-பற்றின்மை போன்ற மாண்புகளை ஏற்பதற்கான செய்தியை வழங்குகிறது. நமது வாழ்வில் மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி, சமூகத்தில் அமைதி, அஹிம்சை, நல்லிணக்கத்தை ஊக்குவிப்போம் என்று திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com