வக்ஃப் திருத்தச் சட்டம்: நாடுதழுவிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக!

வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து நாடுதழுவிய விழிப்புணர்வு இயக்கத்தை பாஜக தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்ENS
Published on
Updated on
1 min read

வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து நாடுதழுவிய விழிப்புணர்வு இயக்கத்தை பாஜக தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து நாடுதழுவிய விழிப்புணர்வு இயக்கத்தை பாஜக தொடங்கவுள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளனர். வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து அரசின் நிலைப்பாட்டையும், அது ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

இதனிடையே, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பை எதிர்த்து, பல முஸ்லீம் அமைப்புகள், பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 16 ஆம் தேதியில் விசாரிக்கவுள்ளது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது.

வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோர் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டு பின்னர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் சட்ட வடிவம் பெற்றுள்ளது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com