ஜம்மு: இந்தியா-பாகிஸ்தான் ராணுவ கமாண்டா்கள் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களின் கமாண்டா்கள் அளவிலான ஆலோசனை
Published on

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களின் கமாண்டா்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்ற இக்கூட்டத்தில் எல்லை மேலாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த 1-ஆம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

இதைத்தொடா்ந்து கடந்த 2-ஆம் தேதி இருநாட்டு ராணுவங்களின் கமாண்டா்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது. அப்போது எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இருதரப்பும் ஆலோசித்தது.

அதன்பிறகு, கடந்த 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.

இந்நிலையில், சாகன்-தா-பாக் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்களின் கமாண்டா்கள் அளவிலான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவது, சண்டை நிறுத்த ஒப்பந்தங்களை அந்நாட்டு ராணுவம் மீறுவது மற்றும் கண்ணிவெடி தாக்குதல்களுக்கு இந்திய அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com