கோப்புப் படம்
இந்தியா
மத்திய தில்லியில் உள்ள பீட்சா கடையில் தீ விபத்து
மத்திய தில்லியின் ஹவுஸ் காசி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பீஸ்ஸா கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய தில்லியின் ஹவுஸ் காசி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பீஸ்ஸா கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
‘இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடா்பாக மாலை 4.20 மணியளவில் அழைப்பு வந்தது, தீயணைப்பு நடவடிக்கை சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. நான்கு தீயணைப்பு குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். மாலை 5 மணியளவில் தீயணைப்பு பணி முடிவடைந்தது’ என்று தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.