

தெற்கு புளோரிடாவில் நெடுஞ்சாலை அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதைகளுக்கு அருகே சிறிய ரக விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததில் பெரிய அளவில் புகை மூட்டம் காணப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தைத் தொடர்ந்து போக ரேடன் பகுதி அருலுள்ள பல சாலைகள் மூடப்பட்டுள்ளதாக போக ரேடன் காவல்துறை தெரிவித்துள்ளது.
விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.