ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நீதி ஆயோக் விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் ‘நீதி ஆயோக்’ (தேசிய கொள்கை குழு) அமைக்கப்பட்டது. தேசிய வளா்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
நீதி ஆயோக்கின் அறிக்கையில், இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் உதிரி பாகங்கள் தயாரிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 145 பில்லியன் டாலர் என்ற உயர் அளவை எட்டும் என்று நீதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.
இன்னொருபுறம், ஆட்டோமொபைல் துறையில் தற்போதைய பொருளாதார ஏற்றுமதியானது 20 பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கும் நிலையில், இது மும்மடங்கு அதிகரித்து 60 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் வாகன தயாரிப்பில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. ஆண்டுதோறும் 6 மில்லியன் வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
உலகளவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறிய ரக கார்கள் மற்றும் அதே ரக வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சவால்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்து இந்தியா ஆட்டோமொபைல் துறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வளர்ச்சியை 2030-இல் எட்டும் என்றும் நீதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.