வன்முறை எதற்கு? மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டம் அமலாகாது! - மமதா பானர்ஜி திட்டவட்டம்

வன்முறை எதற்கு? மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டம் அமலாகாது! - மமதா பானர்ஜி திட்டவட்டம்
மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்
மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் PTI
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்ட திருத்த விவகாரம் காரணமாக வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டம் அமலாகாது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்டுள்ள வக்ஃப் சட்டத்துக்கு எதிராக நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது. வக்ஃப் சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் அதிகளவில் வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வன்முறை நிகழ்ந்துள்ளது. மத்திய அரசால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட வக்ஃப் சட்ட திருத்தமே இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வன்முறை வேண்டாமென்பதை வலியுறுத்தி தமது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவொன்றில் தெரிவித்திருப்பதாவது: ஓரிரு அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்த முயற்சி செய்கின்றன. அவர்களுக்கு இணங்கக்கூடாது. எவ்வித வன்முறை நடவடிக்கையையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவித்திருப்பதாவது; “நாங்கள் இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். இந்த சட்டத்தை ஆதரிக்க மாட்டோம்.

நமது மாநிலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது. அப்படியிருக்கும்போது, கலவரம் எதற்காக நிகழ்கிறது?” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com