
கொல்கத்தா: வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தில் கலவரம் நிகழ்ந்து வருகிறது.
திருத்தப்பட்டுள்ள வக்ஃப் சட்டத்துக்கு எதிராக நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது. வக்ஃப் சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் அதிகளவில் வசிக்கும் மூர்ஷிதாபாத், துலியான் ஆகிய பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளதால், தங்கள் உயிருக்கு பாதுகாப்பானதொரு சூழல் இல்லாததால் அங்கு வசித்து வந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேறிவிட்டதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை வரை 150-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதனிடையே, மூர்ஷிதாபாத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வன்முறை தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மூர்ஷிதாபாத் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.