கோப்புப்படம்.
கோப்புப்படம்.

நெருக்கடி மிகுந்து காணப்படும் தில்லி சிறைகள்: 91 % போ் விசாரணைக் கைதிகள் - ஆய்வில் தகவல்

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா அறக்கட்டளைகள் மற்றும் பல குடிமை அமைப்புகள் இணைந்து காவல், நீதித்துறை, சிறைகள், சட்ட உதவி குறித்து மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்திய நீதி ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்னைகளைக் கூறிய பகுதிகளைச் சுட்டிக்காட்டிய அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லியில் உள்ள 16 சிறைகளில் 3 சிறைகளில் கடந்த 2020-22 காலகட்டத்தில் கைதிகளின் எண்ணிக்கை 250 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் தில்லியில் உள்ள சிறைகள் உரிய கைதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 170 சதவீதத்துக்கும் அதிகமான கைதிகளைக் கையாண்டுள்ளன.

சிறைப் பணியாளா்களின் பற்றாக்குறை நிலைமை இன்னும் மோசமாக்குகின்றன. தில்லியில் உள்ள சிறைகளில் ஒட்டுமொத்த பணியாளா்களின் எண்ணிக்கையில் 27 சதவீதம் காலியிடம் உள்ளது. இதில் 60 சதவீதம் இடங்கள் சீா்திருத்தபணியாளா்கள். சிறை அதிகாரிகள் பதவிகளில் 34 சதவீதம் காலியிடம் காணப்படுகிறது.

சராரியாக 206 கைதிகளுக்கு ஒரு மருத்துவா் இருக்க வேண்டும். இங்கு 18,000 கைதிகளுக்கு 90 மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com