
ஆந்திரத்தில் கிராமம் ஒன்றில் பெண்கள் வெறுங்கால்களுடன் நடப்பதைக் கண்ட துணை முதல்வர் பவன் கல்யாண் அனைவருக்கும் காலணிகளை அனுப்பி வைத்தார்.
ஆந்திர மாநிலம், அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரகு மற்றும் தம்பிரிகுடா பகுதிகளில் துணை முதல்வர் பவன் கல்யாண் சமீபத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பெடபாடு கிராமத்திற்கு சென்ற அவர் மக்கள் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
அங்கு வசிப்பவர்களுடன் உரையாடியபோது பாங்கி மிது என்ற வயதான பெண்ணைக் கண்டார்.
அவர் காலணி இல்லாமல் வெறுங்காலில் நடத்திருக்கிறார். இதேபோல் கிராமத்தில் பலர் வெறுங்காலுடன் சென்றதையும் அவர் கவனித்திருக்கிறார். பின்னர் கிராமத்தில் வசிப்பவர்கள் குறித்த தகவலைக் கேட்டறிந்த பவன் கல்யாண், அனைவருக்கும் காலணிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
துணை முதல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் கிராமத்தில் வசிக்கும் சுமார் 350 பேருக்கும் உடனே காலணிகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், இதற்கு முன்பு வேறு எந்த தலைவரும் எங்களைப் பார்க்கவோ அல்லது எங்களின் பிரச்னைகளைக் கவனிக்கவோ இல்லை.
பவன் கல்யாணின் இந்த நடவடிக்கையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.