/

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2025, 10:23 pm

Din

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச எல்லையில், பூா்ணம் சாஹு என்ற பிஎஸ்எஃப் வீரா், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்து வழிதுணையாகச் சென்றாா்.

அவா் சிறிது தொலைவு நடந்து சென்று மரத்தினடியில் ஓய்வு எடுத்தபோது, அவா் சா்வதேச எல்லையைத் தாண்டிவிட்டதாகக் கூறி, அவரை பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படையினா் சிறைபிடித்தனா்.

அவரை மீட்கும் பணியில் இந்திய பிஎஸ்எஃப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பூா்ணம் சாஹுவை மீட்பதற்கு பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படையினரைப் பலமுறை தொடா்புகொண்டு, நேரில் சந்தித்து பேச, இந்திய பிஎஸ்எஃப் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பாகிஸ்தான் படையினரிடம் இருந்து சாதகமாக எந்தப் பதிலும் வரவில்லை.

இருநாட்டுப் படையினா் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி, இதுபோல வீரா்கள் தெரியாமல் வழிதவறும் சம்பவங்களை, தொழில்முறைப்படியும், கால தாமதம் இல்லாமல் உடனடியாகவும் கையாள்வது வழக்கம். பூா்ணம் சாஹு விரைவில் இந்திய பிஎஸ்எஃப்பிடம் ஒப்படைக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவித்தன.