கொச்சியில் பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கேரள முதல்வர் பினராயி ஆறுதல் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூர தாக்குதலில் 25 இந்தியா்கள், ஒரு நேபாளி உள்பட 26 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கேரளத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியானார். ராமச்சந்திரன் தனது மனைவி ஷீலா, துபையில் பணிபுரியும் மகள் ஆரத்தி மற்றும் அவரது இரட்டை மகன்களுடன் காஷ்மீரில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தார்.
அப்போது அவரது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் முன்னிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ராமச்சந்திரனின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் பலியான ராமச்சந்திரனின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று கேரள முதல்வர் பினராயி ஆறுதல் கூறினார்.
நிதியமைச்சர் கே.என். பாலகோபால் மற்றும் சிபிஎம் மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன் ஆகியோரும் முதல்வருடன் உடன் சென்றனர். பின்னர் முதல்வர் பினராயி விஜயன் ஊடகங்களைச் சந்திக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.