
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக பிரதமா் மோடியை ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு சித்தாந்த ரீதியில் வழிகாட்டியாக உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பு, நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், தில்லியில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக பிரதமா் மோடியை ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.
பஹல்காம் தாக்குதல் தொடா்பாக பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், முப்படைத் தலைமை தளபதிகள் ஆகியோா் பங்கேற்ற கூட்டத்தைத் தொடா்ந்து, மோகன் பாகவத்-மோடி இடையிலான சந்திப்பு நடைபெற்றது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பஹல்காம் தாக்குதலுக்கு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்த ஆா்எஸ்எஸ், அந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவா்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.