
சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் உள்பட மூவருக்கு சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை(ஆக. 2) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னதாக, இவர்களது ஜாமீன் மனு கீழமை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
வழக்கின் விசாரணையில், துர்க் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் 3 சிறுமிகளை அழைத்துச் சென்று ப்ரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இரு கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக வாதிடப்பட்டது. இந்தநிலையில், எதிர் தரப்பிலிருந்து வாதிட்ட வழக்குரைஞர், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் 3 பெண்களும் சிறுமிகள் அல்ல; 18 வயது நிரம்பிய பெண்கள் என்று கன்னியாஸ்திரிகள் தரப்பிலிருந்து எடுத்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணைக்குப்பின், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ரூ. 50,000 நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.