
கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனை அவனின் தந்தை துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளார்.
கேரள மாநிலம், திரிசூர் மாவட்டதில் உள்ள மலக்கப்பராவின் வீரன்குடி பழங்குடியினர் குடியிருப்பில் பேபி என்பவர் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இரவு தற்காலிக குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். சனிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் குடிசைக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அவரது 4 வயது குழந்தை ராகுலை இழுத்துச் சென்றது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை பேபி, உடனே கல்லை எடுத்துக்கொண்டு சிறுத்தையை பின்தொடர்ந்துள்ளார். இதனால் பின்வாங்கிய சிறுத்தை அந்த சிறுனை விட்டுச் சென்றது. தலையில் பலத்த காயமடைந்த ராகுல் முதலில் மலக்கப்பராவில் உள்ள மருத்துவமனைக்கும் முதலுதவிக்குப் பிறகு, சாலக்குடி வட்டம் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டான்.
காயம் மோசமாக இருந்ததால், அறுவை சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறுத்தை குடிசைக்குள் நுழைந்து ராகுலை இழுத்துச் சென்றபோது, தம்பதியினரின் இரண்டு வயது மகளும் அவர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். இதனிடையே திரிசூர் ஆட்சியர் அர்ஜுன் பாண்டியன், குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அடர்ந்த காடுகள் மற்றும் தோட்டங்களையொட்டிய பகுதிகளில், இதேபோன்ற தொடர்ச்சியான வனவிலங்குகள் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.