
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம், குடியரசுத் தலைவர் முர்மு - பிரதமர் மோடி சந்திப்பு பற்றிய விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
நாட்டின் 79ஆவது சுதந்திர நாள், ஆக.15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், பஹல்காம் பயங்கரவாதிகளை அழித்த ஆபரேஷன் மகாதேவ் உள்ளிட்டவை பற்றியும் இருவரும் பேசியதாக தகவல் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.