
காஷ்மீரில் சண்டை நடவடிக்கைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்று ஃபரூக் அப்துல்லா திங்கள்கிழமை(ஆக. 4) தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைகள் முடிந்து ஆக. 3-ஆம் தேதியுடன் 100 நாள்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில், திங்கள்கிழமை(ஆக. 4) செய்தியாளர்களுடன் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசியிருப்பதாவது: “ஜம்மு - காஷ்மீரில் சண்டை நடவடிக்கைகள் ஓயாது; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேம்படும் வரையில் இது நிலைக்கும்” என்றார்.
”இங்கே சில பகுதிகளில் எண்கவுன்ட்டர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில், நீங்கள் எப்படி சண்டை நடவடிக்கைகள் முடிவுற்றது என்று சொல்ல முடியும்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.