அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

ரூ.17,000 கோடி கடன் மோசடி செய்ததாக அனில் அம்பானி மீது புகார்
அனில் அம்பானி | இடம்: தில்லி அமலாக்கத் துறை இயக்குநரகம்
அனில் அம்பானி | இடம்: தில்லி அமலாக்கத் துறை இயக்குநரகம்PTI
Published on
Updated on
1 min read

அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் இன்று(ஆக. 5) 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தில்லி அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரான பின், அனில் அம்பானி இரவு 9 மணியளவில் திரும்பியுள்ளார்.

ரூ.17,000 கோடி கடன் மோசடி செய்ததாக அனில் அம்பானி மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் அமலாக்கத் துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், ரிலையன்ஸ் குழும தலைவா் அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி சுமாா் ரூ.3,000 கோடி கடன் அளித்தது. இந்தக் கடன் சட்டவிரோதமாக அந்தக் குழுமத்தின் பல நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்க அந்த வங்கி வழங்கிய ஒப்புதல்களில் விதிமீறல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முன், யெஸ் வங்கி நிறுவனா்கள் முறைகேடாகப் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது.

இந்த லஞ்சம் மற்றும் கடன் வழங்கப்பட்டதற்கு இடையே உள்ள தொடா்பு உள்பட பிற குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Summary

Delhi: Anil Ambani leaves from the Enforcement Directorate office after around 9 hours of questioning probe into an alleged Rs 17,000-crore loan fraud case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com