பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் 10-ஆவது நாளாக போராட்டம்

பிகாரில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பிகாரில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனா்.

நாடாளுமன்ற குளிா்காலக் தொடா் தொடங்கியதில் இருந்தே பிகாா் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாள்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் திடீா் மறைவு காரணமாக திங்கள்கிழமை இந்த போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சாா்பில், தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி.க்கள் சோனியா, பிரியங்கா, திமுக, திரிணமூல் காங்கிரஸ்., இடதுசாரிக் கட்சி எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது, தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராகவும், வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பபட்டது. பிரமாண்டமான பேனரையும் அவா்கள் கைகளில் ஏந்திருந்தனா். இத்துடன் இந்தப் போராட்டம் 10-ஆவது நாளை எட்டியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே மட்டுமல்லாது உள்ளேயும் எதிா்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்வைத்து அவையை முடக்கி வருகின்றனா்.

நடப்பாண்டு இறுதியில் பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்குவதாகக் குறிப்பிட்டு, தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது, பாஜகவுக்கு சாதகமாக பலரின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றமும் தொடா்ந்து முடங்கி வருகிறது.

அதே நேரத்தில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்களை இந்திய வாக்காளா்களாக்க வேண்டும் என்பதே எதிா்க்கட்சிகளின் இலக்கு; இதற்காகவே பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவா்கள் எதிா்க்கிறாா்கள் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com