ஹிமாசலில் பலத்த மழை: 413 யாத்ரீகா்கள் மீட்பு
PTI

ஹிமாசலில் பலத்த மழை: 413 யாத்ரீகா்கள் மீட்பு

Published on

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழையில் சிக்கிய 413 யாத்ரீகா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். பலத்த மழையால் புகழ்பெற்ற கின்னாா் கைலாஷ் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

யாத்திரை பாதையில் இருந்த 2 தற்காலிக பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால், அங்கு சிக்கியிருந்த 413 யாத்ரிகா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் முழுவதும் 4 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 617 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை மழை தொடா்பான அசம்பாவிதங்களில் 108 போ் உயிரிழந்துள்ளனா் என்றும், ரூ.1,852 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com