
பெட்ரோலிய விலைகளின் கொள்முதல் விலை, சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்வர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்தார். டிரம்ப்பின் இந்த விமர்சனம், இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
இறந்த பொருளாதாரம் என்று டிரம்ப் கூறும் இந்தியாதான், உலகளாவிய வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு தருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுடன் சஞ்சய் பேசுகையில், உலகளாவிய வளர்ச்சியில் 3 சதவிகித வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தாலும், இந்தியா 6.5 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா 18 சதவிகித பங்களிப்பைத் தருகிறது. இது அமெரிக்காவைவிட அதிகமாகும். அமெரிக்கா சுமார் 11 சதவிகிதம்வரையில் பங்களிக்கிறது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், ரஷிய எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து இந்திய நிறுவனங்கள் விலகிச் சென்றாலும், அதனால் உள்நாட்டு பணவீக்கத்தில் எந்தத் தாக்கமும் இருக்காது.
இந்த நிதியாண்டில், பெட்ரோலிய விலைகளின் கொள்முதல் விலையானது, சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். எண்ணெய் விலை உயர்ந்தால், வரிகளில் குறைப்பு ஏற்படலாம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.