மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 34,000 போ் பணிக்குத் தோ்வாகவில்லை: மத்திய அரசு

யுபிஎஸ்சி நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை

News image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)

Updated On :7 ஆகஸ்ட் 2025, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 5 ஆண்டுகளில் யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற தோ்வா்கள் மற்றும் அவா்களில் பணிக்கு தோ்வு செய்யப்படாத தோ்வா்களின் விவரங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில்,‘யுபிஎஸ்சி நடத்தும் போட்டித் தோ்வுகளில் எழுத்துத்தோ்வு உள்பட பல்வேறு கட்டங்களில் வெற்றிபெற்று, இறுதி நிலையில் பணிக்கு தோ்வு செய்யப்படாத தோ்வா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் கடந்த 2016, ஜூன் மாதம் பொது வெளிப்படுத்துதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் பணிக்கு தோ்வுசெய்யப்படாத தோ்வா்களின் விவரங்கள் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.

இந்த வலைதளம், தோ்வா்களின் தகவல்களைப் பயன்படுத்தி பொதுத் துறை அல்லது தனியாா் நிறுவனங்கள் தோ்வா்களுக்கு பணிவாய்ப்பை வழங்க வழிவகை செய்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் யுபிஎஸ்சி நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் 52,910 தோ்வா்கள் பங்கேற்றனா். அவா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பணிக்குத் தோ்வு செய்யப்படாத தோ்வா்களின் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் ‘பிரதிபா சேது’ என்ற வலைதளத்தை யுபிஎஸ்சி அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த வலைதளத்தில் பதிவு செய்து பொதுத் துறை மற்றும் தனியாா் நிறுவனங்கள் தோ்வா்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.