
தில்லியைப் பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பது தனது பொறுப்பு என்று முதல்வர் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஜன சேவா மையத்தில் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டார். அங்கு அவர் பள்ளி மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடினார்.
பிப்ரவரியில் பதவியேற்ற பிறகு முதல்வர் இந்த விழாவைக் கொண்டாடுவது இதுவே முதல் முறை. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்று முதல்வர் ரேகா குப்தாவுவின் கையில் ராக்கிகளைக் கட்டினார்கள்.
ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் பிணைப்பைக் குறிக்கும் ஒரு புனிதமான பண்டிகை என்று முதல்வர் கூறினார்.
முதல்வராக இது எனது முதல் ரக்ஷா பந்தன், இதை நான் குழந்தைகளுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தலைநகர் தில்லியைப் பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பதும் எனது பொறுப்பு என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.